FOR APPOINTMENTS DETAILS
ABOUT OUR GURU
அள்ள அள்ளக் குறையாத ஆழிநீர் போல சோதிடக் கலையைக் கற்றுக்கொடுத்த என் குருவே!
கத்தும் கடல் கவர்ந்திருக்கும். ஒலி கொடுக்கும், நித்தம் தத்தி வரும் நீல அலை துள்ளிவிழும். வடகிழக்கு மேகங்களை வாகாய் இழுத்து வந்து சோழ மண்டலக் கடற்கரையைச் சொர்க்கபுரியாக்கும். திரை கடல் ஓடி திரவியம் தேடி வரும். தலைவன் முகம் பார்க்கத் துயிலைத் தொலைத்துவிட்ட மங்கையர்கள் மனம் தவிக்க, கடல் அன்னை கொடுத்த செல்வங்கள் யாவும் கரையினால் காய பயிரும், நாவாயும் பங்கு கொண்டு வளம் கொழிக்கும், “நாகப்பட்டினம்” என்றதொரு நல்நிலத்தில் தெற்கு திசையோரம் தென்றல் அசைந்து வரும் நிலமகளைச் சமன் செய்ய, அகத்திய முனி அடி வைத்த கையிலை திருமணத்தைத் திருமறை கண்டதாலே, ‘திருமறைக்காடு’ என்ற பெயர் பெற்ற ஊரென்றும், மறைகள் வாழ்ந்ததாலே மறைக் காடென்றும், கற்றவர்கள் விளக்கம் கூறும் ‘வேதகிரி’ என்று புராணங்களில் புகழ் நிறை பெற்ற வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளைப் பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞான சம்பந்தர் பதிகம் பாடித் திறந்த கதவுகளை மூடவும் செய்த அற்புதம் நிறைந்த திருமறைக்காட்டில் ‘சரஸ்வதி’ தவக்கோலத்தில் கையில் சுவடியுடனும், பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டிய வீரஹத்தி விநாயகரும், அகஸ்தியர், விஸ்வாமித்திரர், கௌதமர், வசிஷ்டர் போன்ற மாமுனிவர்கள் வழிபட்டுப் புகழ் நிறைந்த எங்கள் ‘திருமறைக்காடு’ வட்டத்தில் மன்னார்புரம் தெற்கு இருக்க, பாண்டவர் நிலம் வட, கிழக்கிருக்க வளவனாறும், தொண்டியக்காடும் மேற்குப்புறம் இருக்க தென்திசை அடையாத தட்சிணாநடனபுரம்’ தென்னடையார் என்று பெயர்மருவி ‘தென்னடார்’ ஆயிற்று.
தென்றல் தாலாட்டி, செந்நெல் தலையாட்ட, மல்லிகை மணமூட்ட, உழவர் ஏரோட்ட, முள்ளியாறு வளமூட்ட, கற்றோர் வழிகாட்ட, முக்தியும், மோட்சமும் அருள்கின்ற “முக்தீஸ்வரரும்” நாளும் நலம் தரும் “நல்லநாயகி” அம்மனும் புன்செய் நடுவில் புன்னகையாக வீற்றிருக்கும்
எங்கள் முத்துமாரியே!
ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதம். அம்மாதத்தில் மண்குடத்தில் நீரை வைத்து அதன் மேல் வேப்பிலை வைத்து முளைப்பாரிகையாகக் கொண்டு, சுழன்று சுழன்று ஆடுவது காற்று மண்டலத்தில் சுழற்சியை ஏற்படுத்துவதற்காகவே ஆகும்.
அழகு கொஞ்சி விளையாடும் பரக்கலக்கோட்டையில் இயற்கையின் கு வடிவமாய்ப் பசுமை வீற்றிருக்கும்.
“பொதுவுடையாரே” இல்லறமாயினும், துறவறமாயினும் நல்லறமாக இருந்தால் சிறப்பு என்று பொதுவாகத் தீர்ப்புக் கூறியதால் பொது ஆவுடையார் என்று பெயர் பெற்ற எம் பெருமானே. அவன் பெயரை எனக்குச் சூட்டிய என் தாய், தந்தைக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
என் குலம் காக்கும் ஆமைகுளத்து அய்யனாரும், எல்லை காக்கும் எங்கள் அய்யனார் சுவாமிகளும், சைவமும் தவமும் தரணி புகழ் கொண்டு, இறையருள் பாலையா சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தது தென்னடாருக்கு ஒரு சிறப்பாகும்.
பிறப்பும் வாழ்க்கையும்
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தென்னடார் அமுதக தற்போப படுப் நடுக்காட்டில் திரு.சி.பக்கிரிசாமி, ப.ஞான சுந்தரம்பாள் இவர்களுக்குப் பேரனாகவும், திரு.ப.சிங்காரவேல், சி.பத்மாவதி, அவர்களுக்கு பா.மரகதவள்ளி. எனது மனைவியின் பெயர் சு.அருளரசி. எனது சோதிடத் மகனாகவும் 03.02.1984 அன்று பிறந்தேன். எனது மூத்த சகோதரி துறைக்கு மிகப் பெரிய உறுதுணையாக விளங்குபவர். எனது மழலைச்
செல்வங்கள் பொ.அ.பிரதீப், பொ.அ.யதுநந்தன்.
கல்வி:
விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான், 5ஆம் வகுப்பு வரை தொடக்கக் கல்வியை தென்னடார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், இடைநிலைக் கல்வியை என் ஊருக்கு அருகில் உள்ள ‘பஞ்சநதிக்குளம் கிராமத்திலுள்ள நக்கீரனார் பொருளுதவி நடுநிலைப் பள்ளியிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியினை தகட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றேன்.
2004இல் குமரன் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் கல்வி கற்றேன். பின் 2006இல் தமிழ்த் துறையில் இளங்கலை பட்டத்தினை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெற்றேன். 2009இல் முதுகலை தமிழ்ப் பட்டத்தினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வாயிலாகப் பெற்றேன். 2013இல் சிம்ரா கல்வியியல் கல்லூரியில் தமிழ்த் துறையில் கல்வியியல் பட்டம் பெற்றேன்.
முனைவர் பட்ட ஆய்வு:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தஞ்சாவூர் ஓலைச்சுவடித் துறையில் “சோதிடம் சார்ந்த ஓலைச் சுவடிகளின் பதிப்புகள்” என்ற தலைப்பில் ஆய்வு முடிவு பெற்றது.
என்னுடைய நெறியாளர் முனைவர். மோ.கோ. கோவைமணி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். ஆய்வின்போது உற்ற நண்பனாக இருந்து வழிகாட்டுபவர் எனது நெறியாளர்.
சோதிட முறை:
திருக்கணித வாக்கியப் பஞ்சாங்கம் கொண்டு பாரம்பரிய முறையிலும், கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையிலும் பிரசன்னம்,ஆருடம், நிமித்தம், சகுனம், மருத்துவ ஜோதிடம், மூலநாடி முறைகளில் சோதிடம் பார்க்கிறேன்.
ஜோதிடம் மட்டும் அல்லாது ரெய்கி, பிரானிக் ஹுலிங் மற்றும் முன் ஜென்ம ஆய்வுகள், ஆழ்மன சிகிச்சை முறைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கிறேன்.
முன் ஜென்ம நிகழ்வுகளில் உள்ள பதிவுகளுக்கும் சோதிடத்திற்கும் உள்ள தொடப்புகளையும் ஆய்வாக மேற்கொண்டு ALP Astrology method அட்சய லக்ன பத்ததி என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தி மென்பொருள் தயாரித்து சோதிடப் பயிற்சி அளித்து வருகிறேன்
சோதிடர் என்பவருக்கு வழிகாட்டி எனப் பொருள். வாழ்க்கைப் பாதையின் நிலைகளை உணர்ந்து கூறுபவர். அவ்வாறு தெளிவான விளக்கங்களைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் கூறி நமது வாழ்விற்கு வழிகாட்டியாகத் திகழ்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
About ALP Jothidam:
ALP – அட்சய லக்ன பத்ததி : ஜோதிடத்தின் புதிய பரிணாம வளர்ச்சி!
தகவல் தொடர்பு துறை,
விவசாயம்,
மருத்துவம், கல்வித்துறை,
சட்டத்துறை , உணவு மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து துறைகளிலும்
முந்தைய தலைமுறையை விட தற்போது பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது.
ஆனால் ஜோதிடத்தில் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி என்பது அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை.
ஜோதிடம் ஒரு சூட்சுமம் என்பவர்களுக்கு மத்தியில் வீட்டுக்கு ஒரு ஜோதிடர் வேண்டும் என்று சொல்லி தொலைநோக்கு பார்வையில் நடைமுறை படுத்தி கொண்டிருப்பவர் வாக்கு யோகி முனைவர் திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள்.
கடந்த 17 ஆண்டுகளாக 183 ஜோதிட முறையை ஆய்வு செய்து பாரம்பரியம் மாறாமல் காலத்திற்கு ஏற்ற மாற்றம் செய்து தசாபுத்தியை மட்டும் பார்த்து பலன் சொல்லாமல் சீரான வளர்ச்சி பெற்று லக்னம் 10 வருடத்திற்கு ஒருமுறை லக்னம் வளரும் (நகரும்) என்று ஜோதிடத்தில் ஒரு புரட்சி செய்து ALP ஜோதிட முறையில் அடிப்படை வகுப்பு படித்தால் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்… என்று உணர்ந்து உணர்த்தி கொண்டிருக்கிறார்.
யாரெல்லாம் படிக்கலாம் என்று கேள்விக்கு ?
சாதாரண பாமரன் முதல் அறிவியல் விஞ்ஞானி வரை படித்து அவரவர் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றம் முன்னேற்றமாக பெறுகிறார்கள்.
ஆர்வம் இருந்தால் போதும்.
மளிகை கடைகளிலோ
சூப்பர் மார்க்கெட்டிலோ ஒரு ரூ.369 மதிப்புள்ள பொருளை ரூ.400 கொடுத்து ரூ369 போக மீதி ரூ.31 வாங்க வேண்டும் என்றளவில் தேவையான கணிதம் தெரிந்து இருந்தால் போதுங்க ALP ஜோதிடம் படிக்க…
தனது பெயரிலேயே பொதுவுடைமை கொள்கை வைத்து கொண்டு அதற்கேற்றாற்போல் தான் அறிந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை அட்சய பாத்திரமாக உலக மக்கள் அனைவரும் வீட்டுக்கு ஒரு ஜோதிடர் படித்து பயன் பெற வேண்டும் என்று சொல்லி அதனை தொடர்ந்து பிரம்ம முகூர்த்த வேளையில் கற்றுக் கொடுத்து கொண்டிருக்கும் எனது குருநாதர் முனைவர் திரு பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள் பல கோடி !!
ஜோதிடத்தில் பல நவீன கருத்துக்களும், பாரம்பரியமாக பல பயனுள்ள கருவிகளும் மற்றும் தகுந்த முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. அவை அனைத்தும் துல்லியமான கணிப்புகளைக் கொடுக்க நோக்கமுடையவை. அதில் முக்கியமானதும் பொதுவாகப் பயன்படும் முறைகளும் தசா மற்றும் புக்தி ஆகும் — இது சந்திரன் மற்றும் அவன் தங்கியிருக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைந்தது.
இது முக்கியமான பல கணிப்புகளுக்கான அடிப்படையாக இருப்பினும், லக்னா (அசசெண்டன்ட்) எனப்படும் பிறந்த நேரத்தின் முக்கிய புள்ளிக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனால், ஜோதிடக் கணிப்பை மேலும் முழுமையாக்கவும், துல்லியமாக்கவும், லக்னாவுக்கு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
சந்திரன் முதல் நட்சத்திரமான அஸ்வினி முதல் கடைசி நட்சத்திரமான ரேவதி வரை மெல்ல நகரும் போல், லக்னாவும் அதனுடன் தொடர்ந்து நகர்கிறது. இந்த நவீன கருத்தின் உருவாக்குநர் திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்கள். இவர் தனது பெரும்பாலான நேரத்தையும் முயற்சியையும் இந்த கருத்தில் ஆராய்ச்சிக்காக செலவிட்டுள்ளார். இதனை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப சீரமைத்து, சிறந்த முன்கணிப்பு முறையாக உருவாக்கியுள்ளார்.
தனது சுய ஆராய்ச்சியில், இவர் லக்னா நகரும் துல்லியமான வேகத்தை கண்டறிந்தார் — ஒரு நட்சத்திரப் பாதத்தை கடக்க லக்னா ஒரு ஆண்டு, ஒரு மாதம், பத்து நாட்கள் எடுக்கிறது. இதன் அடிப்படையில், ஒரு ராசியை கடக்க 10 ஆண்டுகள் ஆகும். எனவே, இது விம்ஷோத்தரி தசை போலவே 120 ஆண்டுகளின் வாழ்நாள் சுழற்சியை முழுமையாகக் குறிக்கிறது.
இந்த முக்கியமான கருத்து “ALP” – அக்ஷய லக்ன பாததி என அழைக்கப்படுகிறது. இதில் சந்திரனின் இயக்கமும் லக்னாவின் நவீன இயக்கமும் இணைக்கப்பட்டுள்ளதால், துல்லியமான கணிப்புகள் மேற்கொள்ள முடிகிறது.
ஒரு எடுத்துக்காட்டாக, 1964 செப்டம்பரில் மிதுன லக்னத்தில் பிறந்த ஒருவர், 2019 ஆம் ஆண்டில் அவரது ALP லக்னா விருச்சிக ராசியில் வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, அந்த நபரின் பிறப்பு ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் மற்றும் தற்போதைய கிரகச் சஞ்சாரங்கள் ஆகியவற்றின் உறவுகளைப் பயன்படுத்தி, நிகழ்காலச் சம்பவங்களை துல்லியமாக கணிக்கலாம்.
திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்கள் KP சிஸ்டம், பிரச்னா மார்க்கம், நிமித்தம் (அடையாள அடிப்படையிலான ஜோதிடம்), ரேகி, பிராணிக் ஹீலிங், பாஸ்ட் லைஃப் தெரபி போன்ற பல்வேறு ஜோதிட முறைகளில் ஆழ்ந்த ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.
இந்த ALP – அட்சய லக்ன பதத்தி என்ற புதிய கருத்து தற்போது “ALP Method of Astrology” என்ற புத்தகமாக விஜயா பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
Why ALP Jothidam?
ALP (அட்சய லக்ன பதத்தி ) என்பது நவீன யுகத்திற்கேற்ற துல்லியமான ஜோதிட முறையாகும். இது பாரம்பரிய தசா–புக்தி முறையுடன் லக்னா முன்னேற்றம் என்ற புதிய கருத்தை இணைத்து, வாழ்க்கை நிகழ்வுகளை மிகத் துல்லியமாக கணிக்க உதவுகிறது.
சந்திரனின் இயக்கத்தோடு சேர்த்து லக்னாவின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொள்ளும் இந்த முறை, ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சுழற்சியையும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கான விஞ்ஞான ரீதியான அணுகுமுறையாகும்.
ALP ஜோதிடம் — உங்கள் வாழ்க்கையின் வளர்ச்சியைப் போலவே, உங்கள் லக்னாவும் முன்னேறும் என்பதை நிரூபிக்கும் புதிய பாதை!
Our Services
Choose Zodiac Sign
What Our Customers Say
Our Team
Our Latest Blogs
Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
Lorem Ipsum
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Curabitur justo urna, blandit et vestibulum vitae, mollis quis felis. Sed vitae pulvinar ex. Cras ac ligula at diam hendrerit congue. Phasellus […]
Consectetur adipiscing elit sedeiusmod tempor incididunt
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took […]


